டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்.

அறிகுறிகள்
v  கடுமையான காய்ச்சல்
v  வயிற்றுவலி
v  தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி,
v  உடல்வலி, மூட்டு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி,
தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை

காய்ச்சலைத் தடுக்கும் முறைகள்
வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Ø  கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Ø  குழந்தைகள் உறங்கும் பொழுதும் வெளியில் விளையாடசெல்லும் பொழுதும் முழுகால் சட்டை மற்றும் முழு கைசட்டை அணிய செய்ய வேண்டும்.
Ø  4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்
சிகிச்சை முறை
v  இதற்கு தனியாக மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பாராசிட்டமல், போதிய ஓய்வு, நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல்தான் 
  
பப்பாளி இலை சாறு குடித்தல் (புதிதாக  பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர்  ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4  முறை அருந்த வேண்டும்)

 நிலவேம்பு குடிநீர் குடித்தல் : புதிதாக  பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து  வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்த  வேண்டும்

கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்ப்பதன் மூலமே இதை தடுக்க முடியும்.


Comments

Popular posts from this blog

Swales and Contour lines

Nobel Prize Focus On Ayurveda